2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் முறையான பதிவு இல்லாமல் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள்.
1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை அமைப்புகளின் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் பிரிவு (03) இன் படி, ஒவ்வொரு தன்னார்வ நிறுவனமும் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் 06.02.1999 தேதியிட்ட ஜனாதிபதி சுற்றறிக்கை எண். RAD/99/01 இன் படி பணம் வெளிநாட்டு ஆதாரங்கள் பயன்படுத்தப்படும் அனைத்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான தன்னார்வ நிறுவனங்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு தேசிய அளவில் உள்ளன செயலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
அதன்படி, உள்நாட்டு/வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் இந்த செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், ஆனால் அரசு சாரா நிறுவனங்கள் நிறுவன பதிவாளர் துறையின் உத்தரவாதத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும், பிற சட்டங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கீழ் பதிவு செய்து செயல்படும் அரசு சாரா நிறுவனங்களாகவும் பதிவு செய்யப்படுகின்றன. எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யாமல் செயல்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம்
எனவே,
I. மேலும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு/உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தால், அத்தகைய நிறுவனங்கள் இந்த செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
II. மேலும் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனச் சட்டத்தின் கீழ் உத்திரவாதத்தால் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் (INGOs) பதிவு செய்யப்படுவதைத் தடுக்கவும்
III. மேலும் பிற சட்டங்களின் கீழ் பதிவு செய்து செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள் இந்த செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
IV. முறையான பதிவு இல்லாமல் செயல்படும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ சமூக சேவை அமைப்புகள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டம் 1980 எண் 31ன் கீழ் இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவு பற்றிய தகவலுக்கு பார்வையிடவும்
அரச சார்பற்ற நிறுவனனமாக பதிவு செய்ய தேவையான தகைமைகள்.
அரச சார்பற்ற நிறுவனமொன்று பதிவு செய்தலுக்கு அவசியமான அறிவு றுத்தல்கள்.
1980 ஆம் ஆண்டின் 31 ம் இலக்க 4வது உறுப்புரையின் பொருள்கோடலின் அடிப்படையில் தொண்டர் சமூக சேவைகள் அமைப்பு/ அரச சார்பற்ற நிறுவனமாக அமைதல் வேண்டும். பதிவு செய்யப்பட முன்னர் அமைப்பிற்கு பெயரை வைத்து உத்தியோகத்தர் குழு நியமித்திருத்தல் வேண்டும்.
ஓவ்வொரு அரச சார்பற்ற அமைப்புக்கும் அதற்குறிய அனைத்து அறிவித்தல் கடிதங்கள் அனுப்புவதற்கான முகவரியொன்று இருத்தல் வேண்டும். அமைப்பை செயற்படுத்துவதற்காக நிதிவசதி இருத்தல் வேணடும்.
02. உத்தியோகத்தர்கள் /பணிப்பாளர் சபை அமைப்பு
உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை (05) பேருக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
உத்தியோகத்தர், பணிப்பாளர் சபை உத்தியோகத்தர்கள்/ பணிப்பாளர்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு மேல் இருக்க முடியாது. பிரதான உத்தியோகத்தர்களுக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாகாது. இதற்காக ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக துணைவர், பிள்ளைகள், பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளும் அடங்குவர். உள்நாட்டு அமைப்புக்கள் (NGOs) களுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் / பணிப்பாளர் சபையின் பெரும்பான்மையினத்தவர் உள்நாட்டு பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.
சர்வதேச அமைப்புக்கள் ( INGOs) க்காக உள்நாட்டு நிருவாக செயற்பாடுகளை முன்னெடுக்க உள்நாட்டு நபர் அல்லது சிலரை நியமித்தல் வேண்டும்.
03. அரச சார்பற்ற நிறுவனமொன்றில்/தொண்டர் அமைப்பு சேவை நிறுவனமொன்றின்
உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை நியமித்தல் மற்றும் நீக்கல்
உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை நியமித்தல்
உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபையை நீக்கல்
அனைத்து உத்தியோகத்தர்கள்/பணிப்பாளர் சபை நீக்கப்படலானது பொதுச்சபையில் நிறைவேற்றப்படும் முன்மொழிவு நிறைவேற்றல் மூலம் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு
நடைமுறைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அனைத்து உத்தியோகத்தர் / பதிவாளர்/ பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்படல்
வேண்டும்.
04. உத்தியோகத்தர்/பணிப்பாளர் சபைக்கான நியமனங்களுக்கான தகைமையீனங்கள்
05. உத்தியோகத்தர் / பணிப்பாளர் சபை சம்பளம் மற்றும் கொடுப்பணவு பெற்றுக்கொள்ளல்
உத்தியோகத்தர் / பணிப்பாளர்களுக்காக சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன்
கொடுப்பணவுகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.
பதிவு செய்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து அமைப்புக்கள் கீழ்வரும் அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.
உள்நாட்டு நிதியீட்டம் மாத்திரம் கொண்ட ஒரு நிருவாக மாவட்டத்திற்கு மேலதிகமாக பல மாவட்டங்களில் திட்டங்கள் அல்லது செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய மட்டத்தில் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:
உள்நாட்டு நிதியீட்டங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நிதியீட்டங்கள் கிடைக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய மட்டத்தில் வெளிநாட்டு உதவி பெறும் அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்.
இலங்கை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நாட்டின் உரிய சட்டத்தின் கீழ் தமது பிரதான அலுவலகம் அல்லது தாய் சங்கம் இலாப நோக்கமற்ற அமைப்பு என்றடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:
உள்நாட்டு நிதியீட்டத்துடன் ஒரு மாவட்டத்தின் பூகோள பிரதேசத்தினுள் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம், மாவட்ட மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:
உள்நாட்டு நிதியீட்டத்துடன் பிரதேச செயலக பிரிவில் பூகோள பிரதேசத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் பிரதேச மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனம் எனவும்:
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் எனவும்:
அங்கத்தவர் நலன்புரி அமைப்பு ( நிறுவனத்தின் பிரதான நோக்கம் அங்கத்தவர் நலன்புரியை கொண்ட அமைப்புக்கள் ( வெளிநாட்டு நிதி கிடைக்காத) நாடு முழுவதும் அங்கத்தவர்கள்
பரவலாக உள்ளபோதும் அமைப்பு உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் பதிவினை மேற்கொள்ளல்
வேண்டும்.)
அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் கட்டம்
அரச சார்பற்ற அமைப்புக்கள் பதிவு செய்யப்படல் கீழ்வரும் 03 கட்டங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படும்.
1. தேசிய செயலகம்
2. மாவட்ட செயலகம்
3. பிரதேச செயலகம்
உதாரணம்: அங்கத்தவர் நலன்புரி சங்கம், பரஸ்பர உதவி சங்கம், மரண உதவி சங்கம் போன்றன.
அமைப்பின் பெயர் தொடர்பான நியமங்கள்
தற்போது தேசிய, மாவட்ட அல்லது பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்பின் பெயர் வேறு
அவ்வாறான அமைப்பொன்றுக்காக பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் தொண்டர் சமூக சேவை அமைப்பும் சொந்தமானதொன்றை அமைப்பின் பெயருக்காக பயன்படுத்தும்போது அல்லது குறித்த வசனம் ஊடாக ஏதேனும் ஒரு நபருக்கு , பல நபர்கள் அல்லது மக்களை தவறாக வழிநடாத்துதல் அல்லது ஏமாற்றுதல் செய்ய கூடாது. கீழ் வரும் சொற்கள் அல்லது வசனங்கள் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனம் அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்புக்கள் அவற்றின் சுருக்க அல்லது நீண்ட பெயர்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
எந்தவொறு அரச சார்பற்ற நிறுவனமோ அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்பொன்றினால் சொந்த பெயர்களுக்காக சிறிய உள்ளீடுகள் மற்றும் எழுத்துக்கள் மாத்திரம் குறித்த சிறிய உள்ளீடு அல்லது எழுத்துக்கள் மூலம் அறிமுகப்படுத்தும் நீண்ட பெயர் இன்றி பயன்படுத்தக் கூடாது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அல்லது குறித்த மும்மொழிகளுக்கு புறம்பாக எந்தவொரு மொழியையும் அவ்வமைப்புக்களின் பெயர் அவ்வமைப்புக்களின் கடித தலைப்புக்களில், பெயர் பலகைகளில், சமிக்ஞை பலகைகளில் அல்லது வேறு அவ்வாறான ஆவணங்களில் குறிப்பிடாது இருப்பதுடன் அரசுடன் அல்லது ஏனையவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும்போதும் பயன்படுத்தக் கூடாது.
மாவட்ட மற்றும் பிரிவு அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அமைப்புக்களும் செயற்பாட்டு ரீதியில் மேற்குறித்த அறிவுரைகளை கூடியபட்சம் பின்பற்ற வேண்டும்.
பதிவு செய்தல் நடைமுறைகள்
சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான அமைப்புக்கள்
ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் குறிப்பிடப்பட்ட உரிய முறையான படிவத்தில் மற்றும் முறையில் பதிவுகளுக்காக பதிவாளர்ஃ பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை விடுத்தல்
வேண்டும்.
குறிப்பிடப்பட்ட மாதிரிக்கேற்ப குறிப்பிடப்பட்ட ஆவணங்களை முன்வைத்தல் வேண்டும்.
பெயரை அனுமதிக்காக முன்வைக்கப்படும் ஆவணங்களுடன் பதிவு கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினை முன்வைத்தல் வேண்டும்.
கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பதிவாளர்ஃ பணிப்பாளர் நாயகத்தினால் தேவைப்படுவதாக கருதப்படும் விண்ணப்பப்படிவதற்குறிய ஏதாவது மேலதிக தகவல்களை
முன்வைக்குமாறு விண்ணப்பதாரருக்கு விதிக்க முடியும்.
அனைத்து அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் பதிவு செய்ய தகைமை கொண்ட நிறுவனங்களின் விண்ணப்பபடிவம் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் உரிய நிரல் அமைச்சுக்களுக்கு அதன் அனுமதி பெற்றுக்கொள்வதற்காக இவ்வலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்படும்.
உரிய சான்றுப்படுத்தல் அறிக்கை கிடைக்கும் வரை உரிய அமைப்புக்களுக்கு 06 மாதங்களுக்கு தற்காலிக சான்றிதழ் பத்திரம் வழங்கப்படும்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் சான்றிதழ் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் குறித்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டு பிரச்சினை காணப்படாத
போது பணிப்பாளர் நாயகத்தினால் பதிவு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும். குறித்த
சான்றுப்படுத்தல் அறிக்கைகளில் பிரச்சினை உள்ளபோது பதிவு கோரிக்கை நிராகரிக்கப்படும்.
பதிவு செய்தல் நடவடிக்கை ( மாவட்டம் மற்றும் பிரதேச மட்டம்)
பதிவு செய்தல் சான்றிதழ் பத்திரம்
பதிவு செய்தல் சான்றிதழில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் தேசிய செயலகம் , உரிய மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலகத்தின் முன்கூட்டிய எழுத்து மூல அனுமதியை பெற்றுக்கொண்டாலொழிய கீழ்வரும் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.
அமைப்பின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்
தேசிய மட்டத்தில் அல்ல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்
மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்
பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆவணங்களை பேணிச்செல்லல்.
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களும் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களை வைத்திருப்பதுடன் அவற்றை பேணிச்செல்லலும் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர்கள்
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தில் பதிவு செய்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விசா பரிந்துரைகளை வழங்குவதற்கான பொறிமுறை
ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களும் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களை வைத்திருப்பதுடன் அவற்றை பேணிச்செல்லலும் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர்கள்
வீசா வகை
i. நுழைவு வீசா (Entry Visa)
a. குறுங்கால பிரவேச வீசா(Short Term)
ஒரு மாதத்திற்கு குறைவான காலத்திற்காக இவ்வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
b. நுழைவு வீசா (Entry Visa)
நாட்டுக்கு வருகை தந்த நாள் தொடக்கம் ஒரு மாத காலம் வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
ii. வதிவிட வீசா (Residence Visa)
நுழைவு வீசா நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 06 மாதங்களுக்காக இவ்வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
வீசா பரிந்துரை வழங்குகையில் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் முன்வைக்கப்படல் அத்தியவசியமானதாகும்.
பிரதான செயற்பாடுகள்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்குறிய கீழ் குறிப்பிடப்படும் அறிக்கைகள் உரிய மாதிரிக்கேற்பவும் உரிய முறைப்படி தலைமை அலுவலகத்திற்கு உரிய தினத்தில் முன்வைத்தல்.
அமைப்புக்களின் முன்னேற்றத்தினை கலந்துரையாட காலாண்டு அடிப்படையில் மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் கூட்டத்தினை நடாத்துதலும் அதன் மூலம் அமைப்புக்களின் குறைபாடுகளை சீர்செய்தலும் வழிகாட்டுதலும்.
உதவி செயற்பாடுகள்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளினை மேற்கொள்ள 1980 ஆம் ஆண்டின் 30 ம் இலக்க சட்டத்தின் 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய உறுப்புரைகள் ஏற்புடையதாகின்றது.