அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தில் பதிவு செய்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விசா பரிந்துரைகளை வழங்குவதற்கான பொறிமுறை
வீசா வகை
i. நுழைவு வீசா (Entry Visa)
a. குறுங்கால பிரவேச வீசா(Short Term)
ஒரு மாதத்திற்கு குறைவான காலத்திற்காக இவ்வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
b. நுழைவு வீசா (Entry Visa)
நாட்டுக்கு வருகை தந்த நாள் தொடக்கம் ஒரு மாத காலம் வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
ii. வதிவிட வீசா (Residence Visa)
நுழைவு வீசா நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 06 மாதங்களுக்காக இவ்வீசா பரிந்துரைக்கப்படுகின்றது.
வீசா பரிந்துரை வழங்குகையில் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் முன்வைக்கப்படல் அத்தியவசியமானதாகும்.