Top 10 contributors as of 2023

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் உருவாக்கம்

அரச சார்பற்ற நிறுவனங்களின் பரவல்

1970 ஆம் ஆண்டு தசாப்த அரைப்பகுதியில் ஏற்பட்ட லிபரல் பொருளாதார விருத்தியுடன் வெளிநாட்டு செலாவணி ஒழுங்குகளை தளர்த்தல், வர்த்தக மற்றும் சுற்றுலா வரையரை உட்பட வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தது. வெளிநாட்டு உதவிகள் உட்பாய்ச்சல் அதிகரித்தமையால் மக்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பரவலானதுடன் நாட்டினுள் மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பரவல் நடைபெற்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் சார்பாக விசேடமான கடமைப்பொறுப்புக்களை நிறைவேற்றும் என எதிர்பார்த்தமையாலும் அவற்றின் பரோபகார தன்மை காரணமாகவும் அவ்வமைப்புக்களின் நிலைத்தன்மை மற்றும் செயற்பாடுகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை நிருவகிக்கக்கூடிய திட்டவட்டமான சட்ட மற்றும் ஒழுங்கேற்பாடுகள் இதற்கு முன்னர் இலங்கையில் காணப்படவில்லை. இருப்பினும் 1980 இல் அரசாங்கத்தினால் தொண்டர் சமூக சேவை அமைப்புக்கள் ( பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தினால் பிறப்பிக்கப்பட்டதுடன் அதன் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் இச்சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படாது இருந்ததுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்தல் உரிய முறையில் பதிவு செய்யப்படவுமில்லை. அதன் பிரதிபலனாக மக்கள் மற்றும் சில அரச சார்பற்ற நிறுவனங்களால் தம் அமைப்பின் பெயர் மற்றும் சுய நிருவாகத்தினை முறையற்ற அடிப்படையில் பயன்படுத்தல் மற்றும் நிதி முறையற்ற பயன்பாடு தொடர்பில் குரல் எழுப்பப்பட்டது. உண்மையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அவர்களது பணியாளர்கள் மற்றும் வேறு நிறுவனங்களால் முறைப்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன.

The Annual Contribution of NGOs towards the Development, Welfare, and Social Progress of Sri Lanka.

Forecasted Cost for the Year 2023
Rs.31,627,316,473.96
Fundflow for the Year 2022
Rs.18,041,178,170.80
images/joomlart/features/target1.png#joomlaImage://local-images/joomlart/features/target1.png?width=512&height=512

பணிக்கூற்று

இலங்கையின் அனைத்து செயற்பாட்டுடனான அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வதுடன் மேற்பார்வை செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை தயாரித்தல், அவர்களை அரச கொள்கை மற்றும் ஒழுங்கு விதிகளுக்கேற்ப செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.

images/joomlart/features/vision.png#joomlaImage://local-images/joomlart/features/vision.png?width=512&height=512

நோக்கு

தேசிய கொள்கை வரையரையினுள் நாட்டின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் வலுவான மற்றும் அழுத்தத்துடன் கூடிய அரச சார்பற்ற பிரிவொன்றை இலங்கையினுள் உருவாக்கல்.

Latest news & articles
Oct 02, 2024

அரசு சாரா நிறுவனங்களுக்கான செயலகத்தால் குறுகிய கால விசாவை மீட்டெடுக்கப்பட்ட ETA அமைப்பைப் பயன்படுத்தி பெறலாம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி மின்னணு பயண ஆவணம் முறைமையை...

Read More …

Aug 26, 2024

அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தற்காலிகமாக குறுகிய கால நுழைவு விசா விண்ணப்பங்களை பரிந்துரைக்கத் தொடங்கும்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-விசா செயல்முறையை தற்காலிகமாக இடைநிறுத்தியதால், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தற்காலிகமாக குறுகிய கால நுழைவு...

Read More …

Aug 10, 2024

சிவில் சமூக அமைப்பு பிரதேச சம்மேளனத்தினை தாபிப்பது தொடர்பானது

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிறனை அபிவிருத்தி செய்து மாவட்ட அபிவிருத்தி செயன்முறைக்கு...

Read More …


logo202403
14th Floor, Suhurupaya, Battaramulla, Sri Lanka
Telephone: (+94) 112877376
Fax: (+94) 112884612
Email: ngosecretariat.gov@gmail.com