செய்திகள் மற்றும் சம்பவங்கள்
Our blog
Latest news & articles
- Details
பணமோசடி எதிர்ப்பு மற்றும் நிதியளிப்பு பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த, இலங்கை மத்திய வங்கிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடப்பட்டது.
- Details
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி மின்னணு பயண ஆவணம் முறைமையை (ETA) மீட்டெடுத்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது.இலங்கைக்கு வருகை தந்த நாளிலிருந்து முப்பது நாட்கள் (30) விசா காலம் அனுமதிக்கப்படுகிறது.
- Details
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-விசா செயல்முறையை தற்காலிகமாக இடைநிறுத்தியதால், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் தற்காலிகமாக குறுகிய கால நுழைவு விசா விண்ணப்பங்களை பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் அடங்கிய கடிதம் 16.08.2024 அன்று அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், கடிதம் மற்றும்
அது தொடர்பான விண்ணப்பப் படிவத்தை பின்வரும் நீட்டிப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- Details
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிறனை அபிவிருத்தி செய்து மாவட்ட அபிவிருத்தி செயன்முறைக்கு அவர்களின் பங்களிப்பினை வினைத்திறனுடன் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதேச செயலக பிரிவினுள் ஏற்படும் பிரச்சினைக்குறிய சந்தர்ப்பங்களின்போது முகங்கொடுப்பதற்கும் தேவையான முன்னாயத்தத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் சிவிலமைப்புக்களின் திட்டங்களுக்கு பிரதேச கூட்டு அமைப்பாக செயற்படல் மற்றும்.
சிவிலமைப்புக்களின் செயற்றிறனை முறைப்படி ஒழுங்குபடுத்துவதற்காகவும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதேச சம்மேளனத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் தேவையான அறிவுரைகள் உள்ளடங்கிய 2024.08.08 ஆம் திகதிய 11 ஆம் இலக்க சுற்றுநிருபத்தினை வெளியிட பணிப்பாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி சுற்றுநிருபத்தில் உள்ள மாதிரி யாப்பிற்கிணங்க
பிரதேச செயலக பிரிவில் சிவில் சமூக அமைப்பு பிரதேச சம்மேளனத்தினை தாபிப்பது தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களின் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்களை அறிவுறுத்த தயாரிக்கப்பட்ட 11ஆம் இலக்க சுற்றுநிருபம் கீழ் உள்ள இணைப்பு மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
- Details
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் இதற்காக 15-29 வயதுக்கிடைப்பட்ட இளம் தொண்டர்களை பதிவு செய்ய உள்ளது.
- Details
ஆசிய சமூக சேவைத் துறையில், இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், அல்லது NGO 2022 ஆம் ஆண்டளவில் அடைந்திருந்த கரும்புள்ளியை அகற்றி 2024 ஆம் ஆண்டளவில் முன்னேறுவதற்கு 2024 ஆண்டு ஆசிய சமூக சேவை துறையின் செயலாற்றுகையை அளவிடும் DOING Good INDEX 2024 தரப்படுத்தப்படுத்தல் சுட்டி க்கு அமைய முன்னேறி கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ஆகிய நாடுகளுடன் DOING OKEY குழுவில் இணைந்துள்ளது.
- Details
பணிப்பாளர் நாயகம்ஃ பதிவாளரின் ஏளுளுழுஃNபுழுஃசுநுபுஃஊசைஉரடயசஃ01 ம் இலக்க மற்றும் 2024.04.25 ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் புதிய அமைப்புக்களை பதிவூ செய்கையில் நிலவிய முறைமை மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.
- Details
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் இணையத்தளமானது பல வருடகாலமாக குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன் அண்மையில் இதனை இற்றைப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
- Details
சுற்று நிறுப இலக்கம் 06 இன்படி கீழ்மட்டத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் முறைமை திறன்வாய்ந்த அடிப்படையில் தளர்த்தப்பட்டுள்ளது.