அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளினை மேற்பார்வை செய்தல்
பிரதான செயற்பாடுகள்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்குறிய கீழ் குறிப்பிடப்படும் அறிக்கைகள் உரிய மாதிரிக்கேற்பவும் உரிய முறைப்படி தலைமை அலுவலகத்திற்கு உரிய தினத்தில் முன்வைத்தல்.
- வருடாந்த செயற்பாட்டு திட்டமிடல் காலாண்டு முன்னேற்ற அறிக்கை
- வருடாந்த கணக்காய்வு அறிக்கை
- தேசிய செயலகம் மூலம் கோரப்படும் ஏனைய அறிக்கைகள்
அமைப்புக்களின் முன்னேற்றத்தினை கலந்துரையாட காலாண்டு அடிப்படையில் மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் கூட்டத்தினை நடாத்துதலும் அதன் மூலம் அமைப்புக்களின் குறைபாடுகளை சீர்செய்தலும் வழிகாட்டுதலும்.
உதவி செயற்பாடுகள்
- அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் உத்தியோகத்தர்களின் திறனை அபிவிருத்தி செய்வதற்கான இயலளவு பயிற்சி வேலைத்திட்டத்தினை நடாத்தல்.
- அரச சார்பற்ற அமைப்புக்களின் பணிக்குழாத்தினருக்கு இயலளவு பயிற்சி வேலைத்திட்டத்தினை நடாத்தல்.
- அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் வெளிக்கள விஜயம் மேற்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.