1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தொண்டர் சமூக சேவை அமைப்புக்கள் ( பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் நுண்நிதி செயற்பாடுகளை முன்னெடுக்குமாயின் அவை நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனமாக அறிமுகப்படுத்தப்படுவதுடன் குறித்த அமைப்பு 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதி சட்டத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவினை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்தல் விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
(2048/15) ஆம் இலக்க வர்த்தமானி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதன் அடிப்படையில்)
பதிவு கூட்டிணைக்கப்பட்ட சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
அரச சார்பற்ற அமைப்பின் கூட்டிணைக்கப்பட்ட யாப்பு மற்றும் அல்லது கூட்டிணைக்கப்பட்ட கருத்தாக்கப்பத்திரத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
பணிப்பாளர் சபையின் பணிப்பாளர்களின் பிரதான நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் மற்றும் அவ்வாறான நியமனமொன்றுக்கு தெரிவு செய்யப்படும் நபர் ஒருவரின் சத்தியக்கடதாசி மற்றும் வெளிப்படுத்தல் மாதிரிப்படிவம் 1 மற்றும் (ஏ) மற்றும் மாதிரிப்படிவம் ( பி) க்கு ஏற்ப.
ஒவ்வொரு அசையா சொத்துக்களும் தணிக்கை செய்யப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
விண்ணப்பிக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தின் மற்றும் அதன் நிருவாக அரச சார்பற்ற நிறுவனத்தின் கடந்த 03 வருடத்திற்கான கணக்காய்வு அறிக்கை
விண்ணப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட திகதிக்கு முன்னரான மாதத்தின் இறுதியில் விண்ணப்பிக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி வெளிப்படுத்தல்.
விண்ணப்பிக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தின் அமைப்பு கட்டமைப்பு
விண்ணப்பிக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தின் வழிநடத்தல் கையேட்டின் பிரதி
அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஆரம்பிக்கும் முன்னோக்கிய இரண்டு வருடத்தினுள் இருப்பு, கடன் வழங்கல் மற்றும் ஏனைய வழிநடாத்தல் செயற்பாடுகளில் இலாப நட்டம் தொடர்பில் கணிப்புக்களடங்கிய சாத்திய வள அறிக்கை
2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதி சட்டத்தின் ஒழுங்கேற்பாடுகளுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கட்டளைகளுக்கு ஏற்புடையதாக்க அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்ள இயலுமை தொடர்பில் பணிப்பாளர் சபையின் வெளிப்படுத்தல்கள்
மதிப்பீட்டு கட்டணத்தை செலுத்தல்
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேசிய மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனங்களும் 20 ஆயிரம் ரூபாவையும், மாவட்ட மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனங்கள் 10 ஆயிரம் ரூபாவையும் மீள செலுத்தப்படாத மதிப்பீட்டு கட்டணமாக விண்ணப்படிவத்தினை அனுப்புகின்ற சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் கணக்கிலக்கத்திற்கு வைப்பிட்டு குறித்த வங்கி பற்றுச்சீட்டை இவ்வலுலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
ஆரம்ப பதிவுக்கட்டணம்
பதிவை பெறுகின்றவேளை தேசிய மட்டத்தில் நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவை பெற்றுக்கொள்ளும் வருடத்திற்காக இருபதாயிரம் (20,000) ரூபா ஆரம்ப பதிவுக்கட்டணமாகவும் மாவட்ட மட்டத்தில் நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவை பெற்றுக்கொள்ளும் வருடத்திற்காக பத்தாயிரம் (10,000) ரூபா ஆரம்ப பதிவுக்கட்டணமாகவும் பதிவை பெற்றுக்கொள்ளும் தினம் அல்லது அதற்கு முன்னர் செலுத்தி குறித்த வங்;கி பற்றுச்சீட்டை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செலயகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
பதிவை பெற்றுக்கொண்டன் பின்னர் அனுப்ப வேண்டிய ஒழுங்குபடுத்தல் அறிக்கை
நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனமொன்றாக பதிவை பெற்றுக்கொண்டதன் பின்னர் 2017.12.04 ம் திகதி வெளியிடப்பட்ட 2048/15 ஆம் இலக்க வர்த்தமானிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட ,
08 ஆம் இலக்க விதிகளுக்கு இணங்க குறைந்த திரவ சொத்து விகிதத்தை பேணுதல் வேண்டும். அதற்காக குறித்த வர்த்hமானிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட மாதிரிப்படிவத்தை பூரணப்படுத்தி ஒவ்வொரு மாதமும் அனுப்பல் வேண்டும்.
8 ஆம் இலக்க விதிகளுக்கமைய கடன் வசதிகளுக்காக உள்ள ஒழுங்குபடுத்தல் வரைபின் கீழ் வர்த்தாமானிப்பத்திரத்தில் காணப்படும் மாதிப்படிவத்தினை ஒவ்வொரு காலாண்டும் பூரணப்படுத்தி அனுப்பல் வேண்டும்.
10 ஆம் இலக்க விதிகளுக்கு இணங்க தகவல் வழங்கல் தேவைப்பாட்டுக்காக நிதி நிலை வெளிப்படுத்தல் மற்றும் விபரமான இலாப வெளிப்படுத்தல்களை காலாண்டு மற்றும் வருடாந்த அடிப்படையில் அனுப்பல் வேண்டும்.
வருடாந்த பதிவு கட்டணத்தை செலுத்தல்
ஒவ்வொரு நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனமும் பதிவை பெற்றுக்கொண்டதன் பின்னர் தொடங்கும் ஒவ்வொரு வருடத்திற்காகவும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்தை அடிப்படையாக கொண்ட பதிவு கட்டணத்தை செலுத்தி பதவினை இற்றைப்படுத்திக்கொள்ளல் வேண்டும்
கடந்த வருடத்தின் இறுதி தினத்திற்கு முழு சொத்து பெறுமதி | வருடாந்த பதிவு கட்டணம் |
---|---|
ரூபா 5 மில்லியனுக்கும் குறைவாக | 5,000/- |
ரூபா 5 மில்லியனிலிருந்து 10 மில்லியன் வரை | 7,500/- |
ரூபா 10 மில்லியனிலிருந்து 15 மில்லியன் வரை | 10,000/- |
ரூபா 15 மில்லியனிலிருந்து 20 மில்லியன் வரை | 12,500/- |
ரூபா 20 மில்லியனிலிருந்து 50 மில்லியன் வரை | 15,000/- |
ரூபா 50 மில்லியன் தொடக்கம் அதற்கு அதிகமாக | 20,000/- |
அனுமதிப்பத்திரம் ரத்து செய்தல்
நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனத்தின் பதிவை ரத்து செய்வதற்காக 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதி சட்டத்தின் ஊடாக பதிவாளருக்கு இயலுமை காணப்படுகின்றது. அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுகள் குறித்த சட்டத்தின் 27(1) தொடக்கம் (6) வரை பிரிவுகள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.