1. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தங்களது திட்டங்களை செயற்படுத்த தேவையான ஆலோசனை சேவைகளை வழங்கல், அரச நிறுவனங்களுடன் மற்றும் சிவிலமைப்புக்களிடையே ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல்.
  2. நலன்புரி திட்டங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு கொண்டுவரப்படும் பொருட்களுக்காக வரிச்சலுகை பெற்றுக்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கல்.
  3. பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் கடமைகளுக்காக இந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு தேவையான வீசா பரிந்துரைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு
    திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தல்.
  4. அரச சார்பற்ற நிறுவனங்களின் இலகுவான செயற்பாட்டை மேற்கொள்ள பணிக்குழாத்தினருக்கு அவசியமான இயலளவு பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்தல்.
  5. அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனை சபை குழு மற்றும் துறைசார் மேற்பார்வை குழு ஆகியவற்றை தெளிவூட்டல்.