எம்மைப்பற்றி

 

நோக்கு

தேசிய கொள்கை வரையரையினுள் நாட்டின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் வலுவான மற்றும் அழுத்தத்துடன் கூடிய அரச சார்பற்ற பிரிவொன்றை இலங்கையினுள் உருவாக்கல்.

பணிக்கூற்று

இலங்கையின் அனைத்து செயற்பாட்டுடனான அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வதுடன் மேற்பார்வை செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை தயாரித்தல், அவர்களை அரச கொள்கை மற்றும் ஒழுங்கு விதிகளுக்கேற்ப செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் உருவாக்கம்

அரச சார்பற்ற நிறுவனங்களின் பரவல்

1970 ஆம் ஆண்டு தசாப்த அரைப்பகுதியில் ஏற்பட்ட லிபரல் பொருளாதார விருத்தியுடன் வெளிநாட்டு செலாவணி ஒழுங்குகளை தளர்த்தல், வர்த்தக மற்றும் சுற்றுலா வரையரை உட்பட வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தது. வெளிநாட்டு உதவிகள் உட்பாய்ச்சல் அதிகரித்தமையால் மக்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பரவலானதுடன் நாட்டினுள் மேலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பரவல் நடைபெற்றது. அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கம் சார்பாக விசேடமான கடமைப்பொறுப்புக்களை நிறைவேற்றும் என எதிர்பார்த்தமையாலும் அவற்றின் பரோபகார தன்மை காரணமாகவும் அவ்வமைப்புக்களின் நிலைத்தன்மை மற்றும் செயற்பாடுகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்தலின் முக்கியத்துவம்

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை நிருவகிக்கக்கூடிய திட்டவட்டமான சட்ட மற்றும் ஒழுங்கேற்பாடுகள் இதற்கு முன்னர் இலங்கையில் காணப்படவில்லை. இருப்பினும் 1980 இல் அரசாங்கத்தினால் தொண்டர் சமூக சேவை அமைப்புக்கள் ( பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தினால் பிறப்பிக்கப்பட்டதுடன் அதன் மூலம் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் இச்சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படாது இருந்ததுடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்தல் உரிய முறையில் பதிவு செய்யப்படவுமில்லை. அதன் பிரதிபலனாக மக்கள் மற்றும் சில அரச சார்பற்ற நிறுவனங்களால் தம் அமைப்பின் பெயர் மற்றும் சுய நிருவாகத்தினை முறையற்ற அடிப்படையில் பயன்படுத்தல் மற்றும் நிதி முறையற்ற பயன்பாடு தொடர்பில் குரல் எழுப்பப்பட்டது. உண்மையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அவர்களது பணியாளர்கள் மற்றும் வேறு நிறுவனங்களால் முறைப்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன.

பதிவு செய்யும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்

இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் முறைமையொன்றை நாட்டினுள் அறிமுகப்படுத்த கூடிய அவதானத்தை செலுத்த அரசாங்கத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகளினை ஆராய்ந்து அதன் உரிய செயற்பாட்டு தன்மை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப 50,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நிதியத்தினை கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு செய்தலை கட்டாயப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாயினும் அவசர கால சட்ட ஒழுங்கேற்பாடுகள் நீக்கப்பட்டதனால் இம்முறைமை நீக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் சுகாதார, நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சினால் 1980 ம் ஆண்டு சட்டத்திற்கு திருத்தங்கள் சில முன்மொழியப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முகாமை செய்ய அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆலோசனை சபையொன்றை ஏற்படுத்தல் மற்றும் இடைக்கால முகாமைத்துவ சபையொன்றை நியமித்தலுக்கு தேவையான சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. இந்ந ஏற்பாடுகளுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 1998 ஆம் ஆண்டில் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தினால் அங்கீககரிக்கப்பட்டது. (1998 ஆம் ஆண்டின் 8 ம் இலக்க சட்டம்) அதற்கிணங்க 1996 ஆம் ஆண்டில் சுகாதாரம், நெடுஞ்சாலைகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் கீழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் காலத்திற்கு காலம் பாதுகாப்பு, வெளிநாட்டலுவல்கள் உள்ளிட்ட வெவ்வேறு அமைச்சின் கீழ் செயற்பட்டுள்ளதுடன் தற்போது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் 2022 ஜுலை மாதம் தொடக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விடய தானத்தின் கீழ் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வலுவலகம் தமது சேவையை நாடு முழுவதும் செயற்படுத்துவதுடன் அதற்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்புடையதாக நியமிக்கப்பட்டும் உள்ளனர். பதிவாளரின் அதிகாரங்களின் ஒரு பகுதி மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மாவட்ட செயலாளர் பிரதி பதிவாளராகவும் பிரதேச செயலாளர் உதவி பதிவாளராகவும் கடமையாற்றுவதற்கான உத்தியோகபூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Organizational Structure

organization

Arrangement Structure

arrangement


logo202403
14th Floor, Suhurupaya, Battaramulla, Sri Lanka
Telephone: (+94) 112877376
Fax: (+94) 112884612
Email: ngosecretariat.gov@gmail.com