1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் கீழ் நிறுவனங்களின் பதிவு தொடர்பானது.

01) இலங்கையில் இயங்கும்/செயல்பட விரும்பும் அனைத்து வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் (INGOs) அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

02) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

03) முறையான பதிவு இல்லாமல் இயங்கும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த அலுவலகத்தில் பதிவு பெற வேண்டும்.

அதன்படி, பத்தி 1, 2, 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டம் 1980 எண். 31ன் கீழ், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவாளர்
அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம்

 

அரச சார்பற்ற நிறுவனனமாக பதிவு செய்ய தேவையான தகைமைகள்.

  • ஏதாவது ஒரு நபர் குழுவினரால் இலாபத்தை ஈட்டும் நோக்கமன்றி தொண்டர் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
  • நிதியீட்டம் சேகரிக்கும் செயற்பாடு மூலம் உழைக்கும் இலாபம் அல்லது மேலதிகம் அங்கத்தவர்களிடையே பகிரப்பட முடியாது.
  • பொது மக்கள் பங்களிப்பு, புண்ணியங்கள் மூலம், அளிப்பு மூலம். உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நன்கொடை மூலம், அரச பங்களிப்புடன் அல்லது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிதியீட்டம் ஊடாக அமைப்பினை வழிநடாத்த முடியும்.
  • நோக்கம் மற்றும் பெறுமதி (Values) தனிப்பட்ட நலன்கள், அரசியல் நோக்கங்கள் அல்லது மத நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது.
  • யாப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் நாட்டின் சட்ட வரைபு மற்றும் சமூக பெறுமதியினுள் உள்ளடங்குவதாக அமைதல் வேண்டும்.
  • அமைப்பின் நோக்கமானது உளவியல் பாதிப்பு அல்லது உடலியல் அங்கவீனம் கொண்ட வறுமையான, நோய் நிலையான, கைவிடப்பட்ட மற்றும் துன்பப்படும் நபர்களுக்கு தேவையான மானியம் மற்றும் சேவை வழங்கல் மற்றும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கலாக அமைதல் வேண்டும்.

அரச சார்பற்ற நிறுவனமொன்று பதிவு செய்தலுக்கு அவசியமான அறிவு றுத்தல்கள்.

  1. சமூக சேவை அமைப்புக்கள்/ அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்தலுக்காக இருக்க வேண்டிய சாத்தியப்பாடுகள்.

1980 ஆம் ஆண்டின் 31 ம் இலக்க 4வது உறுப்புரையின் பொருள்கோடலின் அடிப்படையில் தொண்டர் சமூக சேவைகள் அமைப்பு/ அரச சார்பற்ற நிறுவனமாக அமைதல் வேண்டும். பதிவு செய்யப்பட முன்னர் அமைப்பிற்கு பெயரை வைத்து உத்தியோகத்தர் குழு நியமித்திருத்தல் வேண்டும்.

ஓவ்வொரு அரச சார்பற்ற அமைப்புக்கும் அதற்குறிய அனைத்து அறிவித்தல் கடிதங்கள் அனுப்புவதற்கான முகவரியொன்று இருத்தல் வேண்டும். அமைப்பை செயற்படுத்துவதற்காக நிதிவசதி இருத்தல் வேணடும்.

02. உத்தியோகத்தர்கள் /பணிப்பாளர் சபை அமைப்பு

உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை (05) பேருக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

உத்தியோகத்தர், பணிப்பாளர் சபை உத்தியோகத்தர்கள்/ பணிப்பாளர்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு மேல் இருக்க முடியாது. பிரதான உத்தியோகத்தர்களுக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாகாது. இதற்காக ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக துணைவர், பிள்ளைகள், பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளும் அடங்குவர். உள்நாட்டு அமைப்புக்கள் (NGOs) களுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் / பணிப்பாளர் சபையின் பெரும்பான்மையினத்தவர் உள்நாட்டு பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.

சர்வதேச அமைப்புக்கள் ( INGOs) க்காக உள்நாட்டு நிருவாக செயற்பாடுகளை முன்னெடுக்க உள்நாட்டு நபர் அல்லது சிலரை நியமித்தல் வேண்டும்.

03. அரச சார்பற்ற நிறுவனமொன்றில்/தொண்டர் அமைப்பு சேவை நிறுவனமொன்றின்
உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை நியமித்தல் மற்றும் நீக்கல்

உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபை நியமித்தல்

  • அனைத்து சபை உறுப்பினர்கள் /பணிப்பாளர் சபை நியமித்தலானது பொது சபை
    முன்மொழிவு நிறைவேற்றப்படல் மூலம் மேற்கொள்ளப்படும் முன்மொழிவு ஊடாக யாப்பில்
    குறிப்பிடப்பட்ட ஒழுங்கேற்பாடுகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
  • புதிய உத்தியோகத்தர்கள் குழு/ பதிவாளர்கள்/ பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை
    பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

உத்தியோகத்தர்/ பணிப்பாளர் சபையை நீக்கல்

  • அனைத்து உத்தியோகத்தர்கள்/பணிப்பாளர் சபை நீக்கப்படலானது பொதுச்சபையில் நிறைவேற்றப்படும் முன்மொழிவு நிறைவேற்றல் மூலம் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு
    நடைமுறைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படல் வேண்டும். 

  • அனைத்து உத்தியோகத்தர் / பதிவாளர்/ பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்படல்
    வேண்டும்.

04. உத்தியோகத்தர்/பணிப்பாளர் சபைக்கான நியமனங்களுக்கான தகைமையீனங்கள்

  • 18 வயதுக்கு குறைவான நபர்கள்
  • உணர்வற்ற நபர் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்
  • ஏதாவது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தில் பிரதானியாக நியமனம் பெற்ற ஒருவர் இன்னொரு அரச சார்பற்ற நிறுவனத்தில் பிரதானியாக நியமிக்கப்படல்
  • இலங்கையில் அல்லது வேறு நாடொன்றின் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்ட நபர் ஒருவர்

05. உத்தியோகத்தர் / பணிப்பாளர் சபை சம்பளம் மற்றும் கொடுப்பணவு பெற்றுக்கொள்ளல்
உத்தியோகத்தர் / பணிப்பாளர்களுக்காக சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன்
கொடுப்பணவுகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவு செய்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து அமைப்புக்கள் கீழ்வரும் அடிப்படையில் வகைப்படுத்த முடியும்.

உள்நாட்டு நிதியீட்டம் மாத்திரம் கொண்ட ஒரு நிருவாக மாவட்டத்திற்கு மேலதிகமாக பல மாவட்டங்களில் திட்டங்கள் அல்லது செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய மட்டத்தில் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:

உள்நாட்டு நிதியீட்டங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு நிதியீட்டங்கள் கிடைக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தேசிய மட்டத்தில் வெளிநாட்டு உதவி பெறும் அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்.

இலங்கை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு நாட்டின் உரிய சட்டத்தின் கீழ் தமது பிரதான அலுவலகம் அல்லது தாய் சங்கம் இலாப நோக்கமற்ற அமைப்பு என்றடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:

உள்நாட்டு நிதியீட்டத்துடன் ஒரு மாவட்டத்தின் பூகோள பிரதேசத்தினுள் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம், மாவட்ட மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனம் என்றவாறும்:

உள்நாட்டு நிதியீட்டத்துடன் பிரதேச செயலக பிரிவில் பூகோள பிரதேசத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் பிரதேச மட்டத்திலான அரச சார்பற்ற நிறுவனம் எனவும்:

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் கீழ் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் எனவும்:

அங்கத்தவர் நலன்புரி அமைப்பு ( நிறுவனத்தின் பிரதான நோக்கம் அங்கத்தவர் நலன்புரியை கொண்ட அமைப்புக்கள் ( வெளிநாட்டு நிதி கிடைக்காத) நாடு முழுவதும் அங்கத்தவர்கள்

பரவலாக உள்ளபோதும் அமைப்பு உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் பதிவினை மேற்கொள்ளல்
வேண்டும்.)

அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் கட்டம்
அரச சார்பற்ற அமைப்புக்கள் பதிவு செய்யப்படல் கீழ்வரும் 03 கட்டங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படும்.

1. தேசிய செயலகம்

  • இலங்கைக்கு வெளியே எந்தவொரு நாட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல்
  • வெளிநாட்டு நிதியீட்டம் கிடைக்கும் எந்தவொறு உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல்
  • ஒரு நிருவாக மாவட்டத்திற்கு மேலதிகமாக பல மாவட்டங்களில் செயற்படும் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல்.
    2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்தல்.

2. மாவட்ட செயலகம்

  • தேசிய செயலகத்தின் கீழ் கவனத்திற் கொள்ளப்படுகின்ற மேற்குறிப்பிடப்பட்ட வகைப்படுத்தலுக்கு உட்பட்ட எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் இங்கு பதிவு செய்யப்படமாட்டாது. இருப்பினும் தேவையான பரிந்துரைகள் பெற்றுத்தரப்படும்.
  • ஒரு நிருவாக மாவட்டத்தில் செயற்படும் ஏதேனுமொரு அரச சார்பற்ற நிறுவனம் இங்கு பதிவு செய்யப்படும்.

3. பிரதேச செயலகம்

  • மேற்குறிப்பிடப்பட்ட வகைப்படுத்தல்களுக்கு உட்பட்ட எந்தவொறு அரச சார்பற்ற நிறுவனமும் இங்கு பதிவு செய்யப்படமாட்டாது.
  • பிரதேச செயலக அதிகார பிரதேசத்தினுள் மாத்திரம் செயற்படும் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனமும் இங்கு பதிவு செய்யப்படும்.

உதாரணம்: அங்கத்தவர் நலன்புரி சங்கம், பரஸ்பர உதவி சங்கம், மரண உதவி சங்கம் போன்றன.

அமைப்பின் பெயர் தொடர்பான நியமங்கள்

தற்போது தேசிய, மாவட்ட அல்லது பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்பின் பெயர் வேறு

அவ்வாறான அமைப்பொன்றுக்காக பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் தொண்டர் சமூக சேவை அமைப்பும் சொந்தமானதொன்றை அமைப்பின் பெயருக்காக பயன்படுத்தும்போது அல்லது குறித்த வசனம் ஊடாக ஏதேனும் ஒரு நபருக்கு , பல நபர்கள் அல்லது மக்களை தவறாக வழிநடாத்துதல் அல்லது ஏமாற்றுதல் செய்ய கூடாது. கீழ் வரும் சொற்கள் அல்லது வசனங்கள் எந்தவொரு அரச சார்பற்ற நிறுவனம் அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்புக்கள் அவற்றின் சுருக்க அல்லது நீண்ட பெயர்களுக்காக பயன்படுத்தக்கூடாது. 

  • தெளிவுபடுத்தல்: “இலங்கை” , “அரச அல்லது அரசின்” , “அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின்”இ “தேசிய” , “ஜனாதிபதி அல்லது ஜனாதிபதியின்” அல்லது அவ்வாறான ஏதேனும் ஒரு அமைப்பு நேரடியாக அல்லது மறைமுகமாக இலங்கை அரசிற்கு , இலங்கை அரசாங்கத்திற்கு அல்லது யாப்புக்கு, நிறைவேற்றுக்கு, நீதிமன்றத்திற்கு அல்லது மாகாண அல்லது நகர நிறுவனங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புபட்டுள்ளதென ஒழிந்துள்ள வசனங்களை அல்லது சொற்களை பயன்படுத்தல் கூடாது.

எந்தவொறு அரச சார்பற்ற நிறுவனமோ அல்லது தொண்டர் சமூக சேவை அமைப்பொன்றினால் சொந்த பெயர்களுக்காக சிறிய உள்ளீடுகள் மற்றும் எழுத்துக்கள் மாத்திரம் குறித்த சிறிய உள்ளீடு அல்லது எழுத்துக்கள் மூலம் அறிமுகப்படுத்தும் நீண்ட பெயர் இன்றி பயன்படுத்தக் கூடாது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அல்லது குறித்த மும்மொழிகளுக்கு புறம்பாக எந்தவொரு மொழியையும் அவ்வமைப்புக்களின் பெயர் அவ்வமைப்புக்களின் கடித தலைப்புக்களில், பெயர் பலகைகளில், சமிக்ஞை பலகைகளில் அல்லது வேறு அவ்வாறான ஆவணங்களில் குறிப்பிடாது இருப்பதுடன் அரசுடன் அல்லது ஏனையவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ளும்போதும் பயன்படுத்தக் கூடாது.

மாவட்ட மற்றும் பிரிவு அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அமைப்புக்களும் செயற்பாட்டு ரீதியில் மேற்குறித்த அறிவுரைகளை கூடியபட்சம் பின்பற்ற வேண்டும்.

பதிவு செய்தல் நடைமுறைகள்
சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான அமைப்புக்கள்

  1. ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் குறிப்பிடப்பட்ட உரிய முறையான படிவத்தில் மற்றும் முறையில் பதிவுகளுக்காக பதிவாளர்ஃ பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை விடுத்தல்
    வேண்டும்.

  2. குறிப்பிடப்பட்ட மாதிரிக்கேற்ப குறிப்பிடப்பட்ட ஆவணங்களை முன்வைத்தல் வேண்டும்.

  3. பெயரை அனுமதிக்காக முன்வைக்கப்படும் ஆவணங்களுடன் பதிவு கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டினை முன்வைத்தல் வேண்டும்.

  4. கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், பதிவாளர்ஃ பணிப்பாளர் நாயகத்தினால் தேவைப்படுவதாக கருதப்படும் விண்ணப்பப்படிவதற்குறிய ஏதாவது மேலதிக தகவல்களை
    முன்வைக்குமாறு விண்ணப்பதாரருக்கு விதிக்க முடியும். 

  5. அனைத்து அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் பதிவு செய்ய தகைமை கொண்ட நிறுவனங்களின் விண்ணப்பபடிவம் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் உரிய நிரல் அமைச்சுக்களுக்கு அதன் அனுமதி பெற்றுக்கொள்வதற்காக இவ்வலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்படும்.

  6. உரிய சான்றுப்படுத்தல் அறிக்கை கிடைக்கும் வரை உரிய அமைப்புக்களுக்கு 06 மாதங்களுக்கு தற்காலிக சான்றிதழ் பத்திரம் வழங்கப்படும்.

  7. பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் சான்றிதழ் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் குறித்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டு பிரச்சினை காணப்படாத
    போது பணிப்பாளர் நாயகத்தினால் பதிவு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும். குறித்த
    சான்றுப்படுத்தல் அறிக்கைகளில் பிரச்சினை உள்ளபோது பதிவு கோரிக்கை நிராகரிக்கப்படும்.

பதிவு செய்தல் நடவடிக்கை ( மாவட்டம் மற்றும் பிரதேச மட்டம்)

  1. குறிப்பிடப்பட்ட மாதிரிக்கேற்ப விண்ணப்பப்படிவம் மற்றும் குறிப்பிடப்பட்ட
    ஆவணங்களை முன்வைத்தல் வேண்டும்.
  2. கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்
    மூலம் தேவை என கருதப்படும் விண்ணப்பப்படிவத்திற்குறிய ஏதேனும் மேலதிக தகவலை
    முன்வைக்குமாறு விண்ணப்பதாரரை கோர முடியும். அதன்போது அதனை முன்வைத்தல்
    வேண்டும்.
  3. மாவட்ட செயலாளர்/ பிரதேச செயலாளருக்கு அமைப்பு தொடர்பில் வேறு ஏதேனும்
    விடயங்கள் தோன்றுகின்றபோது அதனையும் மேற்கொண்டதன் பின்னர் ஏனைய அனைத்து
    அறிக்கைகளினையும் பரிசீலித்து பதிவு செய்ய பொருத்ததமான அமைப்பெனின் குறித்த
    அமைப்பினை உரிய முறைப்படி பதிவு செய்து அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய
    செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவு செய்தல் சான்றிதழ் பத்திரம்
பதிவு செய்தல் சான்றிதழில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியிருத்தல் வேண்டும்.

  1. அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயர், முகவரி
  2. பதிவிலகக்கம்
  3. சான்றிதழ் பத்திரம் வெளியிடப்பட்ட திகதி மற்றும் முடிவடையும் திகதி
  4. வலுப்பெறும் காலம் மற்றும் ஏனைய விடயங்கள்.

பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் தேசிய செயலகம் , உரிய மாவட்ட செயலகம் அல்லது பிரதேச செயலகத்தின் முன்கூட்டிய எழுத்து மூல அனுமதியை பெற்றுக்கொண்டாலொழிய கீழ்வரும் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.

  1. அமைப்பின் பெயர் மற்றும் முகவரியை மாற்றியமைத்தல்
  2. பதிவின்போது வழங்கிய யாப்பில் குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களை மாற்றியமைத்தல்
  3. யாப்பு திருத்தம்

அமைப்பின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்
தேசிய மட்டத்தில் அல்ல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்

  1. ஏதேனும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் பெயர் அல்லது முகவரி மாற்றப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த பெயர் அல்லது முகவரி மாற்றியமைக்கப்படும் தினம் தொடக்கம் 14 தினங்களுக்குள் அது குறித்து தேசிய செயலகத்திற்கும் மற்றும் பயனாளிகள் உட்பட வேறு பங்குதாரர்களுக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தல் வேண்டும்.
  2. தேசிய மட்டத்தில் அல்லது சர்வதேச மட்ட அரச சார்பற்ற அமைப்பொன்றின் பெயர் அல்லது முகவரி மாற்றப்படுகின்றபோது கீழ் உள்ள தகவல்கள் பெற்றுக்கொண்டதன் பின்னர் பழைய இலக்கத்தின் கீழ் புதிய சான்றிதழ் பத்திரம் விநியோகிக்கப்படும்.
    1. ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனமும் விதிக்கப்பட்ட மாதிரிக்கேற்ற பதிவு பெயர் அல்லது
    முகவரியை மாற்றியமைக்க பதிவாளர்ஃ பணிப்பாளர் நாயகத்திற்கு கோரிக்கை விட
    முடியும்.
    2. சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் அறிவித்தல்களின்
    மூலப்பிரதி ( அமைப்பின் பெயரை மாற்ற மாத்திரம்)
    3. பெயர் அல்லது முகவரியை மாற்றியமைக்க பொதுச்சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
    குறித்தான அறிக்கை மற்றும் கையொப்ப ஆவணங்கள்.
    4. முன்னர் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழின் பிரதி

மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைத்தல்

  1. முகவரியை மாற்றியமைப்பது தொடர்பான அனுமதியை பெற்றுக்கொள்ள இரு வாரங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற நிறுவனம் செயற்படும் உரிய மாவட்டத்தில் அல்லது பிரதேச செலகத்தில் அறிவித்தல் பத்திரமொன்றை காட்சிப்படுத்தல் வேண்டும்.
  2. மாவட்ட அல்லது பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர் அல்லது முகவரியை மாற்றியமைக்கையில் கீழ் குறிப்பிடப்படும் தகவல்கள் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த இலக்கத்தின் கீழ் புதிய சான்றிதழ் பத்திரம் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களும் குறிக்கப்பட்ட மாதிரியின்படி பதிவு பெயர் அல்லது முகவரியை மாற்றியமைக்க மாவட்ட செயலாளர்ஃ பிரதேச செயலாளருக்கு கோரிக்கை விடுக்க முடியும்.
  • முன்னர் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழின் பிரதி
  • பெயர் மற்றும் முகவரி மாற்றியமைப்பதற்கான பொதுச்சபை கூட்ட அறிக்கை மற்றும் அதன் கையொப்ப ஆவணங்கள்
  • பிரதேச மக்களை அறிவுறுத்த பயன்படுத்திய அறிவித்தல் பத்திரங்கள்

பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆவணங்களை பேணிச்செல்லல்.

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட தொண்டர் சமூக சேவை அமைப்பு/ அரச சார்பற்ற அமைப்புக்களும் கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களை வைத்திருப்பதுடன் அவற்றை பேணிச்செல்லலும் வேண்டும்.

  1. அரச சார்பற்ற நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் மற்றும் யாப்பு
  2. பொதுச்சபை கூட்ட அறிக்கைகள்/ பணிப்பாளர்சபை கூட்ட அறிக்கை
  3. அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள்/ பணிப்பாளர் சபை பெயர் விபரங்கள்/ பணிக்குழாத்தினரின் தகவல்கள்
  4. கணக்காய்வு அறிக்கைகள்
  5. சொத்து ஆவணங்கள்
  6. நிதியீட்டம் கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் மற்றும் செலவு விபரங்கள்
  7. உரிய சட்டம் மற்றும் கட்டளைகள் அடங்கிய கடித கோவைகள்
  8. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களும் அதன் வருமான- செலவின அறிக்கை, சொத்து மற்றும் பொறுப்புக்கள் உட்பட ஏனைய அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் உரிய முறையில் கணக்குகளை பேணிச்செல்வதுடன் அனைத்து நிதி மற்றும் ஏனைய அறிக்கைகள் இலங்கை கணக்காய்வு தரங்களுக்கமைய பேணிச்செல்லப்படல் வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் பெயர்கள்

  • சர்வதேச
  • தேசிய
  • மாவட்ட
  • பிரதேச

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தில் பதிவு செய்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விசா பரிந்துரைகளை வழங்குவதற்கான பொறிமுறை