சுற்று நிறுப இலக்கம் 06 இன்படி கீழ்மட்டத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் முறைமை திறன்வாய்ந்த அடிப்படையில் தளர்த்தப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டின் 31 ம் இலக்க தொண்டர் சமூக சேவை அமைப்பு ( பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்திற்கு இணங்க பணிப்பாளர் நாயகத்தினால் சுற்று நிருப இலக்கம் 06 வெளியிடப்பட்டுள்ளது.

2020 நவம்பர் 20 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருப இலக்கம் 04 காரணமாக மரண உதவி மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பதிவு செய்தல் நடைமுறைக்காக அதிக காலம் மற்றும் அதிக செலவினங்களை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்னவினால் வெளியிடப்பட்ட புதிய சுற்று நிருபம் ஊடாக குறித்த அமைப்புக்களின் பதிவு செய்யும் நடைமுறை மிக வினைத்திறனுடையதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.